Aries – Jatakam 3
1பொன்தெருக் காலிலேற புதன்ரவி புல்லம்புக்கம்
சந்திரன் முடவன்சாடி சேய்புகர் வீணையாக
மந்தர கயிறுமீனம் மாதையில் சிகியும்நிற்க
வந்தவன் சென்மம்மேடம் வரைகுவீர் பலனைத்தானே
Parvati asked the Rishis to tell the results of a native who has Aries as Lagna and Jupiter in Scorpio, Mercury and the Sun in Taurus, the Moon and Saturn in Aquarius, Mars and Venus in Gemini, Rahu in Pisces, and Ketu in Virgo.
Table of Contents
Birth place of the native
2வீதியும் கிழக்குமேற்கு விளங்கிடும் வடக்குவாடை
ஓதுவோம் ஒருபாலில்லம் உத்திரம் வயல்களாகும்
நிதியாய் கிழக்கில்தந்தி நிலைத்திடும் அக்கினிதேவி
போதவே மாரிமாயோன் புக்கிடும் தென்மேல்திக்கில்
The birth place of the native will be in the northern side in a street running east to west. There will be houses on one side of the street only. In the northern side, there will be agricultural lands. In the eastern side, Lord Ganesha; in the direction of Agni (Southeast), Devi; and near the pond in the southwest direction, a temple for Vishnu will be there.
3இதுவலால் ஈசன்காளி இசைந்திடும் வடமேல்திக்கில்
நதிகரை சோலையுண்டு நாட்டுமிவ் வடையாளத்துள்
பதியது கூரையாகும் பகருவோம் சமவூர்தன்னில்
விதியினால் இந்தபாலன் விளம்புவா னென்றுசொன்னோம்
In addition, in the north side, Lord Shiva and Kali temples are there. In the northwest, there is a river. On the banks of the river, there will be a grove or flower garden. With such an identity, the native will be born in a house having thatched roof. This place is in a plain. Because of his previous karma, this young boy even from his young age is capable of uttering good words to all.
4வந்தவன் செனனயோகம் வளமுள துணைவர்யோகம்
முந்திய தாயின்யோகம் முயன்றிடும் தந்தையோகம்
பிந்திய களத்திரபுத்திரர் பேசுவோம் முன்பின்சென்மம்
சந்ததம் நவக்கோளாய்ந்து சாற்றுவோ மிந்நூல்தன்னில்
We will talk about such a native’s birth yogas, yogas pertaining to his siblings, Yogas pertaining to his mother who will die early, the father’s yogas, and the yogas pertaining to his wife and children. We will tell about the results in the next births after analyzing the nine planets.
Native’s father
5சொல்லிய தந்தைக்கேதான் துணைவர்கள் காணானாகும்
வல்லியே தந்தைசேதி வரைகிறோம் மிகுசிகப்பன்
பல்லவர் நேயனாகும் பத்தினிக் கன்பனாகும்
அல்லல்கள் மத்திலேதான் அணுகிடும் என்றுசொன்னோம்.
The father of the native does not have any siblings. Oh! Young woman! We will tell about the details of father. He has a reddish complexion. He will be friendly with many. He will be dear to his wife. In his middle age, he will be subjected to some troubles.
6தனமது இல்லானாகும் தாட்டியாய் செலவுசெய்வன்
கனமான புத்தியுள்ளான் கணக்குகள் தொழிலைச்செய்வன்
பினையாகும் மத்தியத்தில் போசன சுகியனாகும்
சினமிலான் அடக்கமுள்ளான் சபைதனில் பேசானாகும்.
Even though he does not have enough money, he will spend lavishly. Has a dignified mind. Will be doing the accountancy work. In his middle age, he will face some troubles. He loves food. He is without anger. He is a modest person. Will not talk in a congregation of persons.
7சஞ்சல புத்தியுள்ளான் தன்மனம் கபடுமில்லான்
அஞ்சலென் றோரைக்காப்பன் அதிகமாம் கல்வியில்லான்
நெஞ்சுமே யிரக்கமுள்ளான் நேமியில் சல்லியமுள்ளான்
தஞ்சமாய்ப் பித்தசூடு தங்கிடு மிவனுக்கேதான்
Has a wavering mind. He is without deceit. Will try to help troubled people who approach him. Has not much education. Has a compassionate heart. Has debts. He has a pitta constitution.
8ஆதியில் சுகமுமுளான் அல்பமாம் மத்தியத்தில்
தீதுகள் அதிகமுண்டு சிதறிடும் பூமிகொஞ்சம்
கோதிலா வந்தியத்தில் குலவிடும் சவுக்கியங்கள்
மாதவர் தன்னைக்காக்கும் மங்கையே மேலுங்கேளே
In his early days, he will have all comforts. In the middle period, it will get reduced. Will have troubles. He will lose some of his land holdings. Towards the end of his life, he will get many comforts. The Rishi addresses Parvati as the one who protects the persons doing penance and continues to say more and asks her to listen.
About the native
9இப்படி யிருக்கும்தந்தை இவனுக்கு இந்தசேயும்
மிக்கவே இரண்டாம்பாலன் மேவுவா னிவனேயம்மா
தக்கவே இவன்குணத்தைச் சாற்றுவோம் மால்நிறத்தான்
சிக்கெனப் பொருளும்சேர்ப்பன் தீரமா மனத்தனென்றோம்
To such a father, this native will be born as the second son. We will tell about his characteristics. He will have a dark complexion akin to that of Tirumal (Vishnu). He will accumulate money by remaining stingy. Will have a steady mind.
10பலபல மனுக்கள்நேயன் பாரினில் யூகைசாலி
நலமுறும் கல்வியுள்ளான் நன்னாட்டில் வாசம்செய்யான்
விலைமாதர் விருப்பங்கொள்ளான் விளைபுலம் பின்னால்சேர்பன்
தனமது புதிதாய்ச்செய்வன் சகோதரர் தன்னைக்காப்பன்
Will follow many righteous paths. An intelligently discerning person. Will learn those which will yield him good. Will not live in a good place. Is not interested in prostitutes. Will accumulate properties. Will construct a house. Will render help to siblings.
11தன்னுட இனத்தாருக்குத் தனதனாய் வாழ்வானாகும்
பொன்னொடு மணியும்சேர்ப்பன் புகழது மிகவேகொள்வன்
மன்னமு மன்பாயீவன் வாணிபங்கள் செய்வானாகும்
இன்னவன் கணக்கில்யூகை இயம்பினோம் வறுமையில்லான்
Will live as a rich man among his relations. Will earn lot of Gold and gems. Will be a famous person. Will also donate food to those in need. (The King also will give him presents.) Will do many kinds of business. We have already stated about his capability of maintaining accounts.
12அன்னிய தேசலாபம் ஆள்கார ருடையனாகும்
மன்னனு மொருவர்கீழ்பால் வாழ்குவன் சிலநாள்தானும்
தன்துணை வர்களைக்காப்பன் சகலரும் புகழவாழ்வன்
பிந்திநாள் யோகமுள்ளான் புராதனம் விருத்திசெய்வன்
Will get income from other countries. Will have many servants. He will be working under a King for some time. Will protect his close relations and siblings. He will be praised by others. In his old age, he will be very fortunate. He will increase his ancestral property.
13தந்தைநாள் பூமியல்பம் தனமது கடனுண்டாகும்
விந்தையா யிந்தபாலன் விலக்குவான் பொறுமையுள்ளான்
தந்திர வாதியாகும் தரளம்போல் தந்தமுள்ளான்
நிந்தையு மில்லானாகும் நேமியோர் வசியங்கொள்வன்
During the days of his father, there will be little land holdings. Due to financial problems, debts will rise. This fortunate native will remove all such problems. A very patient person. Capable of talking cunningly. Will have teeth akin to that of pearl. Others will never scold him for any reason whatsoever. He is a charming person.
14கடன்கொளான் யிடுக்கமில்லான் காரிழை பிரியனாகும்
உடன்படான் பிழைகளுக்கு உத்தமர் நேசமாவன்
விடவுரை பகரானுள்ளம் வெகுளிபோல் எவர்க்கும்தோற்றும்
திடமான குடும்பியாவன் தாய்தந்தை பிரியனாவன்
He will not borrow. Will have no troubles or problems in life. He will be loving his wife. Will not do any wrong things. Will become friendly with noble persons. Will never utter words that will give pain to others. All will think that this person has no ill feelings in his mind. He will love his parents.
Native’s siblings
15இவனுட துணைவர்தன்னை இயம்புவோம் அறுவராகும்
அவனியில் ஆண்பால்மூன்று அறைகிறோம் தீர்க்கமாக
நவனியில் மற்றதெல்லாம் நசித்திடு மிவனுக்கேதான்
கவனமாய் முன்பின்சேதம் காதலி கேட்டிடாயே
We will tell about the siblings of the native. They will be six in number. Three will live long. Others, who were born before and after him, will die. Oh! Lovable woman! Listen.
Marriage of the native
16இன்னவன் மணத்தின்காலம் இயம்புவோ மிருபானாலுள்
கன்னிகை மிதுனதிக்கில் கலந்திடு மென்றுசொன்னோம்
அன்னவள் குணத்தைக்கேளாய் அழகுளாள் இருநிறத்தாள்
தன்னிலே யோகசாலி தன்மனம் வெகுளியாவள்
We will tell about the marriage time of the native. In his 24th year, he will marry a girl from the western direction. Listen to her character. She will be beautiful. She will have double colour. She is a fortunate girl. She is an open-hearted girl.
17சீலமும் பொறுமையுண்டு தீங்குக ளெண்ணாளாகும்
ஞானமேல் கோபம்கொஞ்சம் நாயகன் மனம்போல்வாழ்வள்
ஆலம்போல் வார்த்தைகூறாள் அறைந்தனம் வயதுதீர்க்கம்
வேலனை யீன்றமாதே வித்தகி கேட்டிடாயே.
She will have good morality and patience. She will never think of evil. A little hot-tempered girl. She will live according to the wishes of her husband. Will not use harsh words. She will have a long life. The Rishi addressed Parvati as the begetter of Lord Muruga as well as the one who has a special intellect and asked her to listen.
18செயமுனி இதனைக்கேட்டு செப்புவார் முனிவருக்கு
நயமுடன் மனைவிதீர்க்கம் நாட்டினீர் காரணம்சொல்
தயவுள இரண்டுஏழோன் சல்லிய னாகிமூன்றில்
பயமிலா திருப்பதாலே பகர்ந்தனம் தாரம்ஒன்றே.
After hearing this Jayamuni said, “To this native you stated that the wife will be long lived. Tell me the reason.” Rishi replied that the 7th lord, Venus, is in the 3rd house without any blemish and as that is the place of conquer, we said that the native will have only one wife.
19மறித்தவர் சொல்லுகின்றார் மங்கலன் ஏட்டோனாகி
உரமுடன் ஏழோனோடே உறைந்ததால் தாரம்ரெண்டு
நிரந்தரம் என்றுசொன்னோம் நிமலியும் கேட்கலுற்றாள்
சிறந்திடும் ஏழோனோடே சேயவன் கூடினாலும்
But Jayamuni interrupted and said, “the 8th lord— Mars—has conjoined the 7th lord, Venus, and hence there will definitely be two wives.” Parvati said that even if the 7th Lord, Venus, conjoins Mars,
20சுகம்துதி யத்தைபொன்னோன் துலங்கியே பார்த்ததாலும்
புகர்புதன் வீட்டில்சேர பொருந்தாது மனைவிரெண்டு
கவுசிகர் சொல்லுகின்றார் கதிர்புத னிரண்டில்நிற்க
வகையான மனைவிஒன்று மங்கிலியம் இரண்டுஎன்றோம்
… the 2nd house as well as the 4th house of comfort are aspected by Jupiter (placed in the 8th), and as Venus is placed in the house of Mercury, he will not have two wives. Kausika rishi says, “Since the Sun and Mercury are in the 2nd house, there will be only one wife but there will be two mangalyas (marriage badge).
Mangalyam indicates in Tamil/Indian culture a badge made of gold which is tied around the neck of the bride by the bridegroom at the time of marriage. In olden days, marriages were performed even before the girl attained puberty. So, in this verse, the rishi may be stating that the boy might have married a girl, and she would have died even before she had attained puberty. Further clarifications follow in the next verse. The 8th house is the Mangalya sthana. Its lord is placed in an in-auspicious 3rd house along with the 7th lord which may bring about two wives, probably by death of one. But since the 2nd house of family is tenanted by the 4th lord of comfort (the Sun) and the not-so-auspicious rd lord (Mercury; they are aspected by the 9th lord Jupiter), there cannot be two wives. Since the Mangalya sthana lord is afflicted, it may lead to two mangalyas.
21மாதுவும் ஒன்றுஎன்றீர் மங்கிலியம் இரண்டுஎன்றீர்
ஓதுவீ ரந்தசங்கை உரைக்கிறோம் கேளுமம்மா
தீதாகு முதல்மாங்கல்யம் சோரர்கை புக்கபின்பு
மேதினில் வேறுமுத்திரை வித்தக னணைவானாமே
“You said that there will be one wife but two mangalyas. Kindly clarify this point,” asked Parvati. Rishi said, “I will tell you, listen mother! The first mangalya will create damage; it will be stolen by thieves. Thereafter, the native will tie another mangalya.
22எந்தக் காலத்திலேதான் இக்குற்றம் நேரும்சொல்வாய்
சந்தத முப்பானாலில் சாமன்தன் திசையிலேதான்
முந்திய சிகிபொசிப்பில் மெய்திடு மந்தச்சங்கை
கந்தனைப் பெற்றமாதே கழறின மொழிகுன்றாது
“When will such an incident happen. kindly tell,” asked Parvati, and the Rishi said that it will happen in his thirty fourth year when he will be running Mercury dasa. At the beginning of this dasa when Ketu bukthi is running, this will happen. Begetter of Lord Kanda (Subramanya) whatever we have stated will not go wrong.
Native’s children
23மதலைகள் விருத்திதன்னை வரைகுறோம் ஆண்பால்ரெண்டு
சதமுடன் பெண்பாலவ்வார் சாற்றினோம் தீர்க்கமாக
விதியினா லிரண்டுசேதம் விளம்பினோ மிவனுக்கேதான்
நதிசடை யணிந்தோன்தேவி நாயகி புகன்றிட்டோமே
We will tell about the children of the native. He will beget two male and two female children, and they will have a long life. On account of fate, two more children will die. The Rishi addresses Parvati as the wife of one who bears the river Ganga on his head.
Native’s mother
24மாதுரு குணத்தையாங்கள் வறைகுறோம் மிகுசிகப்பள்
வேதனை யொருவர்க்கெண்ணாள் மெல்லிநன் னடக்கையுள்ளாள்
தீதிலா குணத்தாளாகும் சஞ்சல மனத்தளென்றோம்
கோதிலா பித்ததேகி கோதையே மேலுங்கேளே
We will tell about the characteristic of the native’s mother. She will be very reddish in colour. She will not think of harm to anybody. She will be very much gentle. An evil-less character. She will have a wavering mind. She will have a Pitta (bilious) constitution. Listen further, Devi!
Siblings of native’s mother
25இவளிட துணைவர்தன்னை இயம்பவே ஆண்பால்காணோம்
அவனியில் பெண்பாலவ்வார் அறைந்தனம் தீதுமாக
நவனியில் தாய்குடும்பம் நசித்திடு மென்றுசொன்னோம்
தவமுடை யோரைக்காக்கும் தயாபரி மேலுங்கேளே
We will tell about the siblings of the native’s mother. She will not have any male or female siblings. So, the mother’s clan will perish on earth. Listen further, protector of the ascetics!
Previous birth of native’s mother
26மாதுரு முன்சென்மத்தில் வரைகிறோம் பட்சிமேல்பால்
மேதினில் பேரூர்தன்னில் வித்தகி கோகுலத்தில்
தீதிலா உதித்தாளேன்றோம் செல்வர்க ளுள்ளாளாகி
சூதுக ளில்லாவாழ்ந்து சுவாமிகள் பக்திகொண்டு
We will tell about her previous birth. On the western side of a big town, this skillful lady was born in a cowherd’s family without any blemishes. She was born in a rich family there. She lived without any deceptive nature. She was devoted to God.
27ஏழைமேல் பக்திகொண்டு இன்பமாய் வருவோருக்கு
தாழ்விலா தாகமன்னம் தந்துமே வாழுநாலில்
ஆழியில் வந்தவூழை அறைகிறோம் விசேஷநாளில்
சூழ்ந்தனர் பந்துயாவும் தேவியும் ஏதுசெய்தாள்
She had affection towards poor people. She gave food and water to those who came to her. But during a function, when all relatives were assembled in her house,
28இவளுட இனத்தாருக்கு இன்பமாய்ப் பொசிப்பளித்து
நவனியில் வேறுளோர்க்கு நாயகிவஞ் சனையும்செய்தாள்
கவனமாய்ச் சுற்றத்தார்கள் கழறுவர் மனவெறுப்பால்
பவமுள மறுசென்மத்தில் பாவையா யுதித்துமேலும்
She looked after the members of her clan and neglected other relatives. This was noticed by her relations, and they got vexed. They cursed her that she will be born in her next birth also as a woman and
29துணைவர்கள் தோஷமுண்டாய் செனித்தயில் விருத்தியின்றி
கனமிலா குடும்பியாகி காதலி வாழ்வாயென்று
அனையவே பந்துசொல்ல அணுகிற்று அந்ததோஷம்
பிணையான ரோகத்தாலே பேதையும் மரணமாகி
She will not have any siblings, her house will not flourish, and she will live without dignity in her next birth. The curse fell upon her. In that life, she was affected by an incurable disease and died because of that.
Her next birth
30வேதனால் வரியப்பட்டு வித்தகி யுதித்தாளென்றோம்
ஓதுவோ முன்னூழ்சாபம் உரைந்தது இச்சென்மத்தில்
மேதினி லிவள்பின்சென்மம் விளம்புவோம் அவ்வூர் தன்னில்
சூதிலா கங்கைவம்சம் தேவியு முதிப்பாளென்றோம்
Created by Brahma she took birth now. The curse from her previous birth started troubling her in this birth. We will tell about her next birth. In the same village she will be born in the blemish-less Gangai community.
Details of father’s lives
Father’s previous birth
31தந்தையின் முன்சென்மத்தை சாற்றுவோம் காஞ்சிமேல்பால்
முந்திய தீயின்வம்சம் உதித்துமே பெருமைபூண்டு
சந்தத மார்க்கந்தன்னில் தாகப்பந் தலுமமைத்து
வந்தவர் களைகள்தீர்த்து அறுமுகர்க் கடிமையாகி
We will tell about the previous birth of the native’s father. To the west of Kancheepuram, in the high Vanniar caste, he was born, gained nobility, always followed a righteous path, constructed water sheds to quench others thirst, and worshipped Lord Muruga.
32பலவித செட்டுசெய்து பாலகன் வாழுநாளில்
குலவியே வந்தஊழைக் கூறுவோம் கேளுமம்மா
நலமுடன் ஏழையோர்க்கு நற்பொரு ள்ளித்துப்பின்று
பிலமான பூமியெல்லாம் பறித்தவனிவனே யென்றோம்
We will tell about the fate that fell upon him. While living by doing various kinds of business, he was giving alms to the poor, but was confiscating or grabbing their fertile lands.
33ஏழைகள் மனவெறுப்பால் இயம்புவார் சாபம்தானும்
தாழ்விலா மறுசென்மத்தில் தனியனா யுதித்துமேலும்
வாழ்கிற காலந்தன்னில் மத்திம வறுமைபூண்டு
ஆழியி லகத்தியோகம் அணுகிடு மென்றுசொல்லி
The poor people due to vexation cursed him that in the next birth while living without any siblings, he will face poverty and finally he will get fortune in the sea.
34தன்னுட குலதெய்வத்தைச் சதாவுமே நினைத்துக்கொண்டு
இன்னவன் வாதரோக மெய்தியே மரணமாகி
உன்னித கர்னவம் மெய்தன னிவனேயம்மா
சிந்தையாய் ஏழைசாபம் சேர்ந்திடும் இச்சென்மத்தில்
He was always worshipping his Kula Devatha (family deity). At that time, he was affected by paralysis and died. This is that person Mother! The curse given by the poor people affected him in this birth.
Father’s next birth
35பின்சென்மம் காஞ்சிதன்னில் பிறப்பானே கங்கைவம்சம்
மன்னரால் செட்டுசெய்து மாநிலம் அதிகமுண்டாய்
தன்னிலே வாழ்வானாகும் சங்கரி கேட்கலுற்றாள்
உன்னித சாதகர்க்கு உரைப்பீர்கள் பூர்வந்தன்னை
In the next birth, he will be born in Kancheepuram in Gangai community, be supported by the King, increase his land holdings, and live with comfort. Shankari started asking now tell the previous birth of the native.
Previous birth of the native
36சாதகன் பூர்வசென்மம் சாற்றுவோம் காஞ்சிகீழ்பால்
சூதிலா வேளாண்வம்சம் தோன்றினா னிவனேயென்றோம்
போதவே பூமியுண்டாய் புகழ்ச்சியாய்க் குடும்பியாகி
மேதினில் காலாளுள்ளாய் வித்தகன் வாழ்ந்தானென்றோம்
We will tell about the previous birth of the native. To the east of Kancheepuram, he was born in an agricultural family. Had a lot of lands, became a famous family man, had many servants, and lived comfortably.
37அந்நகர் ஆலயத்தில் அரசென விருட்சம்ஒன்று
தன்னிலே யிருக்குங்காலை தானவன் வேலைக்காக
இன்னவன் வெட்டிவிட்டான் இசைக்கிறோம் அதிலோர்சங்கை
உன்னத பிசாசுதானும் உறைந்தது மரத்திலேதான்
In that town, in the temple, there was a fig tree. He cut that tree for his use. There was a spirit living in that tree.
38மரமது போனபின்பு மாமுனிக் கருப்புதானும்
உறையவே இடங்களின்றி உரைத்தது சாபந்தானும்
திறமையாய் மறுசென்மத்தில் செனித்தயில் சேராமல்தான்
விரவினில் வேறுதேசம் மேவியே வாழ்வாயென்று
When the tree was cut, that spirit had no place to live in and hence cursed him that in his next birth he will not have any house to live in and go to a foreign country and live there.
39வாழ்குவா யென்றுசொல்லி மறுயிடம் கருப்புசெல்ல
ஆழியில் அம்மரத்தை ஆலயங்க ளுக்குவாசல்
தாழ்விலாக் கதவுசெய்தான் சத்தான வஸ்துபேரில்
சூழ்மண முள்ளானாகி சுந்திரன் வாழ்ந்தானென்றோம்
After cursing him like this, that spirit went to another place. He used that tree to prepare strong doors to the temple. This is also a righteous act. Thereafter he was living with a little confusion.
40இதுவலால் இன்னமொன்று இயம்புவோம் பட்சிதன்னில்
நதியினில் மாதொருத்தி நழுவினா ளந்தக்காலம்
அதிபனும் அங்குசெல்ல மங்கையைக் கரையில்சேர்த்தான்
விதியினால் சீவித்தாளாம் விளம்புவா ளவள்தன்தாயார்
We will tell one more information also. In Tirukazhukundram, a woman fell into the river and was drowning. He happened to pass that way and brought her to the bank. She survived. That woman’s mother said,
41என்மகள் தன்னைநீயும் இடறிலா காத்ததாலே
பின்வரும் சென்மந்தன்னில் பிரியமாய் மணமும்செய்து
அன்னவ ளுடனேவாழ்வாய் அறைந்தன ளவள்தன்தாயார்
இன்னவாறு முனிவர்சொல்ல ஈச்வரி கேட்கலுற்றாள்
“Since you saved my daughter from danger, in your next birth, you will marry her and live with her happily and comfortably.” When the seven rishis stated, Eswari started asking:
42மாதுரு மெந்தசாதி வரைகுவீர் முனியேயென்றாள்
தீதிலா கங்கைவம்சம் சேயள் அந்தமாது
ஓதுவே னந்தமாதை உத்தமன் இச்சென்மத்தில்
கோதிலா மணமேகொள்வள் கோமளி கேட்டிடாயே
“Oh! Rishi! To which clan did that woman belong to?” Rishi stated that she belonged to Gangai community. Our native in this birth married that blemish-less woman. Kindly listen! Mother!
43அச்சென்மம் தன்னிலேதான் அவன்செய்த புண்ணியத்தால்
மிச்சமாய் நோய்களின்றி வித்தகன் மரணமாகி
இச்சையாய் மறையோனாலே இவனுமே வரியப்பட்டு
லச்சை யில்லாமலேதா னாயக னிக்குலத்தில்
Because of the good deeds done in that birth, he lived without much disease and died. Then after creation by Brahma our native was born. He was born in this Vanniar community.
44உதித்தவ னிவனேயென்றோம் உரைக்கிறோ மிச்சென்மத்தில்
சதிசெயும் பிசாசுசாபம் தங்கிற்று செனித்தயில்லம்
பதியினில் வாழானாகும் பரதேசம் வாசமாகும்
நிதியது மிகவேசேர்ப்பன் நிமலியே கேட்டிடாயே
Such was the way this native was born. In this birth, because of the curses of the spirit, he could not live in his house in the place where he was born. So, he had to go to another country. He accumulated money. Listen Devi!
Time of death
Death of the parents
45தந்தையின் மரணகாலம் சாற்றுவோம் முப்பானாறில்
சந்ததம் மேடமாதம் சாற்றுவோம் கெண்டந்தானே
பிந்திய அன்னைக்கேதான் பேசுவோம் அதின்மேல்மூன்றும்
பந்தமா யானிமாதம் பகருவோம் கருமந்தானே
We will tell about the time of death of his father. In his 36th year, in the month of Mesha (April-May) he will die. Three years later, his mother will die in the month of “Aani” (June-July). At that time, he gets authority to perform the funeral rites.
Death of the native
46இன்னவன் மரணகாலம் இயம்புவோம் ஐம்பான்மூன்றில்
தன்னிலே கெண்டமுண்டு சண்முகர் தன்னால்நீங்கி
பின்னையும் ஐம்பானாறில் பேசினோம் கன்னிமாதம்
உன்னத பருவந்தன்னில் உரைத்திட்டோம் உடலம்நீங்கும்
We will tell the time of death of the native. In his 53rd year, he will face a crisis and due the blessings of Lord Shanmuga that will pass on its own. Thereafter in his 56th year, in the month of Kanni (September-October), he will die.
Next birth of the native
47மறுசென்மம் ஒத்தியூரில் மறைகுல முதிப்பானாகும்
திருமகள் வாசமுள்ளாய் செகமன்னர் பக்கல்தன்னில்
பெருமையா யரசுசெய்து பூமியில் வாழ்வானாகும்
அறுமுகன் தன்னைப்பெற்ற அம்பிகை யாளேகேளாய்
In the next birth, he will be born in a Brahmin community in Tiruvotriyur. Due to the blessings of Goddess Mahalakshmi, he will live near the King with pomp and glory. Oh! Begetter of six headed lord Arumuga! Listen.
Fortunes of the native
48இன்னவன் பொதுயோகத்தை இயம்புவோம் சுகமுமுள்ளான்
தன்னிலே பொருளுமுள்ளான் சல்லிய மில்லானாகும்
சொன்னசொல் தவறானாகும் சொந்தமா மாடிசெய்வன்
பன்னிரண் டாண்டின்மேலே பாலகன் தனக்குயோகம்
We will tell about the general Yoga of the native. He is a rich, comfortable person, without any debts. Will not go back on his words. Will construct a house with many floors. He will get yoga only after his 12th year.
49முப்பது ஆண்டின்மேலே மொழிகிறோம் செட்டுசெய்வன்
செப்புவோம் மரணமட்டும் பிறைபோலே யோகம்வாய்க்கும்
எப்போதும் கடவுள்பக்தி எய்திடும் வசியமுள்ளான்
கப்பிய பெரியோரிஷ்டம் கனத்திடு மேன்மேலோங்கும்
After his 30th year, he will do many businesses and till his death, fortune will come his way like that of a growing Moon. He will always be worshipping God. Capable of attracting anybody. Will befriend elderly people. Will act according to their wishes. Fortune will go on increasing.
50சொந்தவியா பாரம்செய்வன் தொல்புவி யதிகம்சேர்ப்பன்
பிந்திய யோகமுள்ளான் பூஷண மதிகம்கொள்வன்
சந்ததம் கிருஷிஓங்கும் சகலர்க்கு நல்லோனாவன்
கந்தனைப் பெற்றமாதே கழறின மொழிகுன்றாது
He will do his own business. Will increase the ancestral property. Even in his later life he will be lucky. Will get ornaments. Always the yield from the lands will go up. Oh! Begetter of Kanda! Our words will not fail.
51முனிவரிவ் விதமாய்க்கூற மொழிகுவா ரம்மந்தானும்
இனிமையாய் துணைவர்சேதி இயம்புவீர் முனியேயென்றாள்
தனயர்கள் சேதியெல்லாம் சாற்றுவோம் இரண்டிலேதான்
கனமுண்டு குடும்பசேதி கழறுவோம் கேளும்தாயே
When the Seven rishis stated like that, Parvati asked, “henceforth tell about the siblings of the native.” Rishi said that we will tell about his brothers in the second part. We will tell about the family matters, Listen Mother!
52குடும்பமும் பிரிதலில்லை குலவிநாற் பாண்டின்மேல்
அடவுடன் கிரகம்வேறு உறைந்தனம் இதுவல்லாமல்
சடலங்க ளுதிக்குங்காலை இரணியன் திசையிலேதான்
திடமதா யீராறாண்டும் திங்களு மொன்றேயாகும்
His family will not disintegrate. After his 40th year, he will live in another house having groves and flower gardens. The remaining dasa at birth is 2 years and one month of Jupiter dasa.
53பலனது அல்பமாகும் பகருவோம் துணைவர்விருத்தி
நலமில்லை துணைவர்சேதம் நாற்காலி நஷ்டமாகும்
உலகுளோர் வசியமாகும் உற்றபந் துக்கள்நாசம்
பலபல பிணியும்காணும் பாக்கியம் சேதமென்றோம்
In this period, he will get very low income. No benefits on account of brothers. Brothers will die. There will be loss of quadrupeds. Relations will die. Will get many diseases. Fortune will be very less.
54தொழிலது விருத்தியென்றோம் சுகதுக்கம் கலந்துவாழும்
பழிவரு மந்தியத்தில் பகையுண்டு செலவனேகம்
வழிவிலா சஞ்சலங்கள் வந்திடும் சிலதுசேதி
தயவுட னிரண்டிலேதான் சாற்றுவோம் கேளும்தாயே
Business will flourish. He will experience both happiness and sorrow. In the middle period, worries will be there. Enmity will be created. Expenses will increase. Certain events we will say only in the sencond part. Listen! Mother!
55இருபது நாலாண்டின்மேல் இசைக்கிறோம் யோகம்தானும்
பெருகிடும் தனதானியங்கள் பிரபல குடும்பமாகும்
திருமகள் வாசமுண்டு சென்றிடம் பெருமைகாணும்
வரைகிறோம் சல்லியம்நீங்கும் மங்கையே கேட்டிடாயே
We will tell about the yoga that will come to him after his 24th year. Grains and wealth will increase. Family will flourish. Lakshmi will reside in his house (he will have all kinds of wealth). Wherever he goes he will be honored. Debts will get cleared. Listen Mother!
Translated by Yenbeeyes; edited by Madhivanan
Kindly voice your views