Aries – Jatakam 4
1பொன்சனி புகர்சேய்மேரு புதன்பணி பரிதிகோலாம்
பின்சிகி மேடமாக பிறைதேளில் கொச்சைசென்மம்
இன்னவாறு கிரகம்நின்றால் இப்பலன் புகல்வீரய்யா
முன்னமே பராசரர் சொல்வார் உதித்திடுஆண்பால்சென்மம்
Parvati asks about the results for a native who has Aries Lagna; Ketu is in Aries; Mercury, Rahu, and the Sun are in Libra; the Moon is in Scorpio; and Mars, Venus, Saturn, and Jupiter are in Sagittarius. Parasarar first tells that this is the horoscope of a male.
Table of Contents
Native’s house
2வந்தவன் வடதென்வீதி வாசலு மேற்குபார்வை
முந்தின பேரூராகும்உயர்வான் வாணிபமோங்கும்
மன்னர்கள் வாசமாகும் மடிந்ததோர் கெடியுமுண்டு
இந்தநல் லடையாளத்துள் இறங்குவா னிந்தபாலன்
His house will be facing west in a street running north to south. It is a big city housing the kings with a booming business and a ruined hillfort. This native will be born in a place with such signs of recognition.
3பாலகன் செனனயோகம் பருகிய அன்னையோகம்
சாலவே தந்தையோகம் தன் துணை களத்திரபுத்திரர்
ஏலவே முன்பின்சென்மம் இயம்புவோ மின்னூல்தன்னில்
கோலமாய்த் தந்தைவர்க்கம் குன்றிடு மிருநான்கென்றோம்
This lad’s birth fortunes; fortunes of the mother, father, siblings, his wife, and children; and the details of the previous/next births will be stated in this book. His father will have eight siblings, but all will not survive.
Fathers’s brother
4பின்துணை ஒருவன் தீர்க்கம் பேசுவோ மவன்குணத்தை
அன்னியர் நேசம்கொள்வன் அல்பமாம் கல்வியுண்டு
முன்துணை பகையுமெய்தும் மொழியுமுன் கோபியாகும்
பொன்பணி செய்வானாகும் புகலுமுன் கோபியாவன்
His father will have one younger brother. We will tell about the younger brother’s characteristics. He will befriend foreigners. Will have very little education. Will quarrel with his elder brother (that is with the native’s father). Will be doing business in gold. A short-tempered person.
5தந்திர மொழியேகூறுவன் தன்சொல்லு மிரண்டுமுண்டு
வந்தவூர் பாரிஒன்றே மந்தறாண் பலமுறாது
இந்துவின் வதனம்போன்ற எழிலுள்ள கன்னியொன்று
அந்தவள் தீர்க்கசீவி அணுகாது மற்றதெல்லாம்
He is capable of talking with cunningness. Will also talk contradictory words. Sometimes there will be double meaning also in his words. There will be only one marriage. His words will have no effect before her. She will be beautiful and will be like that of a Moon. She will be long lived. No other problem will come.
About the father
6மத்திம வயதேயாகும் வரைகிறோம் பின்பால்சேதி
வித்தையு மதிகம்கற்பன் வெண்மையா மனத்தனாகும்
புத்திசூட் சுமமேயாகும் பின்புத்தி முன்கோபத்தன்
அத்தியி னிறத்தனாகும் அணுகிடு நாபிசூடு.
He will survive till middle age. We will tell about his details later. The native’s father will be well educated. Has a pure mind. Will have a subtle mind. Will be indiscrete. Short-tempered person. Will have a dark complexion. He will have a pitta constitution.
7நவனூலை யுணர்வானாகும் நற்கரம் கத்திரிரேகை
தவசிக ளுறவுகொள்வன் சந்தேக மனத்தனாகும்
பவமனம் சிலர்க்குகல்வி பகருவான் பொறுமைசாலி
நவநீதம் பிரியமாகும் நடையது துருசுமுண்டு
He will understand the new books. He will be interested in good deeds. Will befriend ascetics. Has a doubtful mind. Has a destructive mind. Will educate a few. Is a patient person. Will be fond of butter. Will have a hasty and fast gait.
8வருஞ்சேதி சொல்வானாகும் மன்னர்கள் உறவுகொள்வன்
குறைமன தாகவாழ்வன் குண்டைகோ விருத்தியில்லான்
அரிவையர் மோகனாவன் அலைதுரும் பதுபோல்நெஞ்சம்
முருகர்தன் பத்திகொள்வன் முதல்வியே கேட்டிடாயே
He is capable of telling the future. Will befriend Kings. Will be living with discontent. Will not have cattle wealth. Will be interested in women. Will have a wavering mind. Will be devoted to Lord Muruga. Oh! Lady of distinction! Listen.
9பஞ்சலோ கங்கள்வேலை பண்ணுவான் சோம்பல்கொஞ்சம்
நஞ்சுபோல் மனமும்கொஞ்சம் நல்லோர்க்கு நல்லோனாவன்
வஞ்சியர் குணத்தானாகும் வரைந்தயிக் குணத்தானுக்கு
கொஞ்சுவா னாறாஞ்சென்மம் கூறுவோ மிவன்குணத்தை
He will be doing the work of five metals (called as Pancha Loka). A little lazy. Mind will be like that of a poison to some extent. But he will be good to those who are good to him. A deceitful characteristic person. To such a person of character, our native will be born as the sixth child. Now we will tell about the native.
About the native
10வித்தையு மிரண்டுகற்பன் விவேகியாம் எவர்க்குநண்பன்
சித்தமே கருப்புமில்லான் சிறப்புள குடும்பமேற்பன்
சுத்தவான் எதிரிக்கஞ்சான் தோகைவா கனத்தோன்பக்தி
நத்தினோர்க் குதவிசெய்வன் நாயகி மார்கள்மோகன்
The native will learn two types of skills. A clever man. Will be friend to all. Will have no ill-feelings in his mind. Will get the best family. A pure man. Will not be afraid of his enemies. He is a devotee of Lord Muruga. Will help those who approach him for assistance. Will be fond of women.
11பலருக்கும் நல்லோனாவன் பாருகள் பின்னால்சேர்ப்பன்
புலவன்போல் மொழிவானாகும் புண்ணிய மனத்தனாகும்
தலம்தீர்த்தம் செல்வானாகும் தந்தைக்கு மேலாய்வாழ்வன்
நிலையதைக் காப்பானாகும் நீக்குவான் அல்பர்தன்னை
Will be good to many. Will accumulate lands in the later part of his life. Will talk like a poet. Will have a righteous mind. He will visit holy places and take dip in holy waters. He will achieve higher status than his father. He will retain his position. He will not permit inferior people to come near him.
12விடமதை உறவுகொள்வன் மேலவர் பத்திபூண்பன்
மடமயில் மார்கள்மோகன் அரசர்கள் பேட்டிபூண்பன்
குடயாளன் குலத்துக்கேதான் கூறுவான் உபதேசங்கள்
சடைமுனி இவ்வாறுசொல்ல செயமுனி தடுத்துச்சொல்வார்
He will have sexual intercourse with other’s wives. He will be devoted to elders. He will love beautiful women. He will have an audience with the kings. He will also be charitable to his community and guide them according to his community laws. When the Rishi with matted hair (here it refers to Parasarar) said like this, Jeyamuni interrupted:
13என்னகா ரணத்தினாலே இயம்பினீர் யோகம்தானும்
பொன்சனி புகர்சேயொன்பான் பொருந்தின பலத்தினாலே
சொன்னனே யோகம்தானும் சுதனுக்கு அந்தாண்டின்மேல்
சந்திரன் பிறைபோல்யோகம் சஞ்சலம் நிவர்த்தியாகும்
“What is the reason for you to tell such fortunes for the native?” The conjunction of Jupiter, Saturn, Venus, and Mars in the 9th house gives such a yoga. After the age of five, the native will get fortune, and it will grow like that of an increasing Moon.
14இதுவின்றி மூவைந்தாண்டில் எய்திடும் நிதிநிட்சேபம்
அதுஇல்லம் தன்னில்நேரும் அதற்குமேல் விசேஷயோகம்
பதியது புதிதாய்செய்யல் பகருவோம் பின்பால்சேதி
கதிபெற தவங்கள்செய்யும் காதலி கேட்டிடாயே.
In addition to this, in his 15th year, he will get a treasure, and that will come from his own house. Beyond that he will have special yoga period. He will construct a new house. we will tell about it later. Loving mother! Listen.
About the mother
15தன்துணை ஆண்பால்ரெண்டு சத்தியு மொன்றுதீர்க்கம்
பின்னமா மற்றதெல்லாம் பின்பாகம் சேதிசொல்வேன்
அன்னையின் குணத்தைக்கேளாய் அன்புள மனத்தளாகும்
முன்கோபி உடனேசாந்தம் மொழியது சுகமேயெய்தும்
He will have two brothers and one sister, who will live long. Others will perish. We will tell about their results in the later part. We will now tell about the characteristics of the native’s mother. She has a loving mind. A little short-tempered but will become calm immediately. She will get all comforts.
Mother’s previous life
16வரன்மனம் போலேவாழ்வள் வளவுமே குடகுஎன்றோம்
அரிவையின் துணைஆண்மூன்று அம்பிகை மார்கள்ரெண்டு
குறைவுறும் குடும்பம்தானும் கோதையின் பூர்வம்கேளாய்
பிரிதிவு தலத்திலேதான் பிறந்தனள் நெசிவுவம்சம்
She will be living according to the wishes of her husband. Her house was in Kudagu. She will have three brothers and two sisters. Her birth family will not prosper. Listen! We will tell about the previous birth of her. She was born in kancheepuram in a weaver’s family.
பிரிதிவு means earth, one of the Pancha bhutha sthalangal. The correct word is பிரிடிவி. In Kancheepuram, the name of the lingam at Ekambareswarar temple is Prithvi Lingam.
17மங்கைக்கு மதலையுண்டாய் அறுமுகன் பத்தியாயும்
எங்கள்போ லதிதிக்கன்ன மீந்துமே பவமில்லாமல்
சங்கையாய்க் காலநாடு சென்றுமே பிரமன்லக்கம்
நங்கையும் உதித்தாளென்றோம் நவிலுவோ மிவள்பின்சென்மம்
She begat children. She was devoted to Lord Muruga and offered food to destitute and those who are hungry. She died without suffering any difficulties and went to the abode of Yama. As per the calculations of Brahma, she took birth in this life as mother of the native. We will tell about her next birth.
Mother’s next life
18தென்திசை தில்லைதென்பால் சிறுஊரில் வைசியசேயாய்
பொன்பணி உடையளாகி புகழுடன் வாழ்வாளாகும்
தந்தையின் பூர்வம்சொல்வேன் தணல்மலை நாட்டிலேதான்
துன்மதி வடுகர்வர்க்கம் செனித்தன னென்றுசொல்வோம்
She will take birth in a small village situated to the south of Chidambaram in a Vaisya community and will be living with name and fame by doing golden works. We will tell about the previous birth of the father of the native. Will be born in Thiruvannamalai in the Vadugar community. (Vadugars are those who migrated to Tamilnadu from Andhrapradesh).
Father’s previous/next lives
19பலவித செட்டுசெய்து பாரியு மதலையுண்டாய்
குலவுநாள் வினையைக்கேண்மோ குறைவோரை மோசம்செய்தான்
நிலையிலார் சாபம்தானும் நேர்ந்தது இவனுக்கேதான்
தலமது அந்தம்தாழ்ந்து தலவாசம் சென்றுபின்னோன்
Doing various kinds of business, was living with wife and children. At that time a misfortune came upon him. He cheated the poor people. Such poor people cursed him and that came upon him. He lost his position and visited various holy places and
20காலன்தன் நாடடைந்து கஞ்சனால் வரியப்பட்டு
சீலமாம் விஸ்வசேயாய் செனித்தன னென்றுசொல்வோம்
ஆலம்போல் ஏழைசாபம் அணுகிடு மிச்சென்மத்தில்
ஞாலமேல் வறுமையேற்பன் நாயகி கேட்டிடாயே
Attained the abode of Yama and was created by Brahma again. He was born in the Vishva caste. Like that of the snake poison, the curse of the poor people of the earlier birth befell him in this birth. He was subjected to penury. Listen! Mother!
About the native (continued)
Native’s marriage
21பின்சென்மம் கொங்குநாட்டில் பிறப்பனாம் கங்கைசேயாய்
மன்னரால் சீவிப்பானாம் மந்தன்தன் மணத்தைச் சொல்வேன்
கன்னிகை குடகில்நேரும் கலக்குநாள் ஈரொன்பாண்டில்
அன்னவள் தீர்க்கசீவி அத்திரி தடுத்துச்சொல்வார்
Next birth of the native’s father will be in the Kongu region (Kerala) in the Gangai community. He will live with the assistance of the King. We will tell about the time of marriage of the native. His wife will come from the western direction. She will join him in his 18th year. She will be long lived. Rishi Athri objects to this
22பாரிய மிரண்டேயாகும் பகருவீர் அந்தசங்கை
தீரமாய் ராகுபானு சத்தம மதனில்தங்க
கூறினோம் தாரம்ரெண்டு குறுமுனி தடுத்துச்சொல்வார்
நீர்புகர் காரிபொன்னோன் நிகர்பாக்கி யத்தில்தங்க
There will be two marriages. Kindly clarify that point. Clearly and with confirmation we say that as Rahu and the Sun are in the 7th house there will be two wives. Agasthiya rishi objects and says that as Venus, Saturn, and Jupiter are placed in the 9th house of Baghya,
23தாரமே ஒன்றுஎன்றோம் சத்தமம் ராகுதோஷம்
பாரிக்கு அன்னைரெண்டு பகருவோம் முனியேயாங்கள்
காரிழை தனக்குமுத்திரை கலப்பனா மிரண்டுஎன்றோம்
ஆறஞ்சு இரண்டுஆண்டில் அழிவுண்டு கள்ளனாலே
There will be only one marriage. Rahu in the 7th place is a blemish; because of that his wife will have two mothers. Oh! Rishi! The native will tie the mangalyam to his wife twice. During his 32nd year, the first mangalyam will be lost to thieves.
Native’s children
24அதுவின்றி வேறுகாணான் அம்பிகை ஒன்றேதீர்க்கம்
புதல்வர்கள் அறுவர்தோன்றும் போகிடும் ஒன்றுஎன்றோம்
சதமுடன் ஆண்பால்மூன்று தையலர் இரண்டுஎன்றோம்
இதுஐந்தும் தீர்க்கமெய்தும் ஈச்வரி கேட்டிடாயே
Apart from this there is no such position to show that there will be two marriages. There will be only one wife. He will beget 6 children; one will die. Three male and two female children will live long. Listen, Devi!
Native’s previous life
25பாலகன் பூர்வம்சொல்வேன் பரங்குன்ற நாட்டிலேதான்
சீலமாம் கங்கைசேயாய் செனித்துமே வறுமையின்றி
ஞாலத்தால் சீவித்தேதான் நலிந்தோர்க்கு அன்னமீந்து
காலன்தன் பதிக்குபுக்கி கஞ்சனால் வரியப்பட்டு
We will tell about the previous birth of the native. He was born in a broad mountain country in the disciplined Gangai community and lived doing agriculture and was without poverty. Was giving food to the poor and reached the abode of Yama and was created by Brahma.
26உதிப்பனா மிந்தபாலன் உரைக்கிறோம் யோகச்சேதி
பதிசெய்வன் பூமிசேர்ப்பன் பஞ்சலோ கங்கள்வேலை
அதிசெய மாகச்செய்வன் ஐந்தாண்டின் முதலாயோகம்
நிதியது பெருக்கம்செய்வன் நிமலியே கேட்டிடாயே
And this native was born again. We will tell about his fortunes. He will accumulate lands. He will do admirable work using the five metals. He will get his fortune after his 5th year. He will increase his wealth. Listen, Devi!
Death of the parents & native
27இருபது ஆண்டுதன்னில் ஏகுவன் தந்தையென்றோம்
திருகிலா அதின்மேல்முன்றில் செல்லுவாள் அன்னைதானும்
அறுபது ஆண்டுதன்னில் ஆனிமா தத்திலேதான்
மறலியின் பதிக்குச்செல்வான் மந்தனும் என்றுசொல்வோம்
When the native is of 20 years old, his father will die. Three years later, his mother will die. The native will die in the month of Aani (June-July) in his 60th year.
28எப்படி வயதுதீர்க்கம் இரணியன் தனக்கீறாறில்
தப்பித மதியும்நிற்க சகடையால் வயதுஅல்பம்
அப்படி சொல்லொணாது அந்தணன் நவத்தில்தங்க
ஒப்புடன் வயதுதீர்க்கம் உரைக்கிறோம் இவன்பின்சென்மம்
How you say that the native will have a long life? As the Moon is in the 12th position from Jupiter, he has sakata dosha and will be short lived. But as Jupiter is in the 9th house, he will have a long life. We will tell about his next birth.
Native’s next life
29அந்நகர் தன்னிலேதான் அருமறை குலமுதிப்பான்
இன்னவன் செனனகாலம் இட்டிநாள் இரண்டாம்பாதம்
புந்தியின் திசையிருப்பு பொருந்திடும் பதினோறாண்டும்
வந்திடும் திங்களாறும் வரைகிறோம் பலனைத்தானே
He will be born in the same town in the Brahmin community. His nakshatra is Kettai (Jyestha), 2nd padam. The remaining dasa at birth is 11 years and 6 months of Mercury dasa.
30அன்னைக்குப் பிணிஅநேகம் அதிகமாய் வறுமையுண்டு
இன்னவன் தனக்குரோகம் இடுக்கண்கள் சல்லியபாதை
தன்மன சஞ்சலங்கள் தாய்வழி சூதமெய்தும்
பின்பாகம் விபரமாகப் போசுவோம் முனியேயாங்கள்
During this period, his mother will be subjected to many diseases. Will be affected by abject poverty. Native will also get diseases. Adversity, trouble, and vexation will be the path of living. Mental worries, mother side relation’s cunningness, and many other matters, we will talk in the second part.
Translated by Yenbeeyes; edited by Madhivanan
Kindly voice your views