1திங்களும் சாடியாக செம்பொன்னும் காரிமீனம்
பங்கயன் வெள்ளிபுந்தி பற்றிடம் நந்தியாக
மங்கலன் கடகமாக அதிதியும் வீணையாக
இங்கிவை கிரகம்நின்று லக்கினம் மேடமாக
This horoscope is of Aries Lagna with the Moon in Aquarius; Jupiter and Saturn in Pisces; the Sun, Venus, and Mercury in Taurus; Mars in Cancer; Ketu in Gemini; and Rahu in Sagittarius.

Native’s House

2பலனதை புகலுமென்று பார்வதி கேட்கும்போது
நலமுள வதிஷ்டரிஷிசொல்வார் நாயகன் செனனமாகும்
தலமது கீழ்பால்நோக்கம் தென்வட வீதியாகும்
சலஓடை வடபாலாகும் சாமுண்டி தென்பாலாகும்
When Parvati asked the rishis to tell the results of such a horoscope, Vasishtar says that this horoscope belongs to a male. The house where he is born will be facing east, situated in a north-south street. A stream is in the northern part, and Chamunda devi is on the south side.
3அருகினில் நதியுமுண்டு அணுகிய பேரூராகும்
திருமகன் வைசியசேயாய் செனிப்பனாம் என்றுசொல்வோம்
பெறுஅன்னை தந்தையோகம் பேதையர் புத்திரயோகம்
உரைக்கிறோம் முன்பின்சென்மம் உத்தமி கேட்டிடாயே
There is a river nearby. He lives in a big town. The native is born in the Vaisya caste. We will tell in detail about the fortunes of his father, mother, children, and also about their previous/next births. Listen! 

Siblings and characteristics of the father

4தந்தையின் துணைஆண்ரெண்டு சத்தியு மொருத்திஎன்றோம்
அந்தஆண் விருத்திராது அந்தத்தோன் தனக்குக்கன்னி
சந்ததம் ஒருத்தியென்றோம் சாற்றுவோம் பின்பால்சேதி
இந்தவன் தந்தைசேதி இயம்புவோ மிருநிறத்தான்
His father has two male and one female siblings. The brothers have no male issues, and the younger brother has only one female child. We will tell about their details in the later chapters. We will tell about the father now. He will be of double colour.
5பலவாணி பங்கள்செய்வன் பரஉப காரனாகும்
விலைமாதர் மோகம்கொள்ளான் வீண்பழி யேற்பானாகும்
தவமது செய்வானாகும் சல்லிய பாதைகாணான்
புலவன்போல் வார்த்தைசொல்வன் புயபல முடையனாகும்
He will be doing a variety of trade. Helpful to others. Will not be interested in prostitutes. Will be subjected to unwanted scandals. Will be pious. Will not be incurring any debts. Capable of talking like a poet. Will have personal strength and valor.
6சொல்லது சுருக்கமாகும் சுந்திர முடையனாகும்
இல்லையென் றுரைக்கமாட்டான் இதிகாச மறியானாகும்
அல்லலில் லாமல்வாழ்வன் அறுமுகன் பக்திகொள்வன்
வல்லிசொல் கடவானாகும் மங்கையே கேட்டிடாயே.
Will tell short and crisp words. Will be a handsome person. Will never say no. Will not be knowing ancient moral religious texts and mythology. Will be living without any troubles. Will be devoted to the six-headed God Lord Muruga. Will listen to the words of his wife. Listen! Lady.

About the native

7சொன்னயிக் குணத்தானுக்குத் தோன்றுவா னிந்தபாலன்
அன்னவன் குணத்தைச்சொல்வேன் அரிநிறம் வாததேகி
தன்மனம் வர்மமுண்டு சமகல்வியீகை கொஞ்சம்
பின்னமி ல்லாததேகன் பலசெட்டு செய்வானாகும்
To such a characteristic father, this native will be born. We will tell about his characteristics. The native will have a complexion like that of Lord Vishnu. Will have a vata constitution. He is malicious. Education and righteousness will be there a little. He will have a strong body without any defects. Will be doing many kinds of business.
8கடன்கொள்வன் நிவர்த்திசெய்வன் காலிகள் விருத்திஅல்பம்
உடன்படான் பிழைகளுக்கு உறுதியா மனமும்கொஞ்சம்
மடையரை உறவுகொள்ளான் வாக்குச்சொல் தவறானாகும்
உடன்துணை காணானாகும் உரைப்பீர்கள் அந்தச்சங்கை
He will incur debts but will clear them in due course. Increase in four-legged animals will be very less. Will not commit any mistakes. Will have a strong-willed mind.  Will not have relationship with the fools. One who never fails in his words. We do not find any siblings for the native. Kindly clear that point.

Siblings of the native

9கேதுவும் முன்றில்தங்க குசனுமே நாலில்நீசம்
ஆதலால் துணையும்காணான் ஆண்டுக்குள் தந்தைமாள்வன்
சாதகன் பூர்வம்தன்னில் தரித்திரம் உடையனாகும்
மாதாவால் சுகமுமேற்பன் மங்கையே கேட்டிடாயே
Because of the placement of Ketu in the 3rd house (of siblings) and of Mars in a debilitated position in the 4th house (Mars is the karaka for siblings) there will be no siblings. Before he attains one year, his father will die. In the beginning, the native will be in poverty. Will get happiness through his mother. Listen! Lady!

The 9th house of father is occupied by Rahu. Rahu will give the results of Jupiter who is the owner of the house. Jupiter, the 9th lord going to the 12th house indicate loss of 9th house significations of which father is also one. This Jupiter is with the 2nd lord Saturn (from the 9th house) who is a maraka for father. The 7th lord from the 9th house who is the other maraka of father has gone to the 6th house from the 9th house and is conjoined with the karaka for father, Sun. It is stated in the last verse that Native was born in Satabhisha Nakshatra and hence at the time of birth Rahu dasa was in operation. So, Rahu has given the results through Jupiter.

Marriage of the native

10ஈரொன்ப தொன்றுஆண்டில் இவனுக்கு பாரிவாய்க்கும்
நாரியும் உள்ளூர்கீழ்பால் நல்கிடும் குணத்தைச்சொல்வேன்
பாரிய புத்தியேற்பள் பதர்குண மில்லாளாகும்
சீறிடாள் வாததேகி சிந்தையும் நல்லதாகும்
In his 18th year, he will get married. That girl will be living in the eastern side in his locality. We will tell about her character. She will accept the words of her husband. She will not be of worthless character. She will not be short tempered. She will have a vata constitution. Will have good intentions.
11மங்கைபாட் டாளியாகும் வருவோரை ஆதரிப்பள்
சங்கையென் றோரைச்சாறாள் சர்ப்பம்போல் கோபம்கொஞ்சம்
நங்கைக்கு வயதுதீர்க்கம் நாதனார் பத்திபூண்பள்
பங்கய முகத்தளாகும் பர்த்தாவின் மனம்போலவாழ்வள்
She is an industrious person. She will support those who come to her for assistance. She will not join those with doubtful characters. She will be hissing like a snake if she gets angry. She will have long life. She will be devoted to her husband. She will have a face akin to that of a lotus. She will live according to the wishes of her husband.

About his children

12புத்திர விருத்திதன்னைப் புகலவே பலமுறாது
சித்தமாய் உதித்தாலுந்தான் தீங்காகு மென்றுசொன்னோம்
குற்றத்தைச் சொல்லுமென்ன குருசனி விரையம்புக்க
வெத்தியாய் தனுசில்ராகு மேவின பலத்தால்சொன்னோம்
There is no strength (in the horoscope) to tell about the issues. Even if they are born, they will die. We will tell the reason for such a blemish. As Jupiter and Saturn are in the 12th h0use, some issues will be born and they will die. This is also because of Rahu in Sagittarius.

Jupiter, karaka for children, is afflicted due to its placement in the 12th house. Being a movable Lagna, the 11th lord becomes Badhaka lord and as such Saturn also is responsible for the absence of issues to the native. The placement of Rahu in the 9th house being the 5th from 5th house, he will also be responsible for no or loss of issues. Rahu will give the results of Jupiter as he is alone in Sagittarius. The 5th lord Sun is also afflicted due to the conjunction of 6th lord Mercury and 7th lord Venus. Both Venus and Mercury are malefics for Aries Lagna. In the next verse, it is argued by the Rishis that the combination of Mercury, Venus and Sun are in the 2nd house of family, there must be a son to the native. But this is counteracted by another rishi and reasons for that are given there.

13புதன்புகர் பரிதிரெண்டில் புக்கின பலத்தினாலே
சுதனாலே கர்மம்நேரும் தென்முனி புகலுகின்றார்
வதிபன்தன் முன்சென்மத்தில் மருவிற்று சிலதுதோஷம்
அதினாலே புத்திரதோஷம் அவன்தந்தை வர்க்கம்நாஸ்தி
Agasthiyar says that as Mercury, Venus, and the Sun are placed in the 2nd house of family, there must be a son to perform the final rites. But another sage says that in his earlier birth there was a dosha or blemish. Hence the Putra Dosha or childlessness. His father’s lineage will perish and there will be no issues.

Previous birth of the native

14என்னஊழ் செய்தானதை இயம்புவீர் முனியேநீதான்
முன்சென்மம் கொங்குநாட்டில் உதித்தனன் வன்னியசேயாய்
உன்னத குடும்பியாகி உத்தமன் வாழும்நாளில்
கன்றுக்குப் பால்விடாமல் கறந்தனன் அதுஓர்தோஷம்
What kind of past deed that he did, Kindly tell Oh! Rishi! said Goddess. In his previous birth, he was born in Kongu country (said to be the Kerala State) in Vanniar caste. While this excellent person was leading a dignified family, he took milk from the mother cow without leaving milk for its calf. That was one deed.

A detailed description is available in Wiki here.

15பலர்செல்லும் மார்க்கம்அசத்தான் பற்றிற்று அதுஓர்தோஷம்
புலவருக் கிடைஞ்சல்செய்தான் இகழிலாக் கவிகள்பாட
குலவிற்று அந்தசாபம் கோத்திரம் தன்னைப்பற்ற
தலைவனும் அந்தியத்தில் தரித்திர மிகவேகொண்டு
He damaged the common path which was used by many and this was another blemish. He created trouble to the learned poets. Because of him they sang songs of ill-repute and their curses fell upon him and his family. In the end, he was in abject poverty and
16காலன்தன் நாடடைந்து கஞ்சனால் வரியப்பட்டு
சீலமில் லாதவைசிய குலமதி லுதிப்பானாகும்
ஆலம்போல் முன்னூழ்சாபம் அணுகிடும் சுதரும்தோஷம்
சாலவே தந்தைவர்க்கம நாஸ்தியாம் துணையும்தோஷம்
Reached the abode of Yama and was created again by Brahma and was born in the undisciplined Vaisya family. Like a poison, the bad deeds of the previous birth will come into operation in this birth. There will be dosha or blemish for the children. Father’s lineage will perish. Dosha will come for the co-borns too.

Previous birth of the wife

17இதுவின்றி மனைவியாலே எய்திற்று சிலதுன்பம்
அதுவினை புகலக்கேண்மோ அவளுட பூர்வம்கேளாய்
வதிபதி பூர்வம்சொல்வேன் மைசூரு நகரிலேதான்
நிதிமிக உடையானுக்கு நேர்ந்தனள் கர்ணசேயாய்
Not only this. He got some more trouble on account of his wife too. We will tell about it. Listen, Mother! Kindly listen to her previous birth. Her father was a rich man in Mysore. She was born as daughter to him. 
18சுகமுள குடும்பியாகி சுந்தரி வாழுநாளில்
பகையதைப் புகலக்கேண்மோ பஞ்சைகள் மதலைக்காக
தகைமையாய் அன்னம்கேட்க சர்ப்பம்போல் கோபமுற்று
வகையுட னில்லையென்றாள் மருவிற்று அதுஓர்தோஷம்
When this beautiful lady was living happily in the family, some bad things happened which I will tell. Listen! Poor people asked for food for their starving children, and this girl became angry and hissed like a serpent and said there is no food. That was one blemish.
19கொல்லையின் முனியும்வாசம் குலதெய்வம் எனத்துதிப்பார்
வல்லியும் கெருவத்தாலே மாமுனி தனைத்தொழாமல்
புலகிடும் முனியும்சாபம் பூவையே தொழாமல்நின்றாள்
கொல்லுவேன் சுதரைபாரு கூறும்பின் சென்மம்தன்னில்
In the backyard of her house, a spirit was living and that was worshipped as the family deity. She, becoming arrogant, did not worship that spirit and hence was cursed by that spirit. “In your next birth, I will kill all your children.
20உன்னிடம் வாசமாவேன் உதிக்காது சுதர்கள்தானும்
இன்னவாறு சொல்லியேதான் ஏகிற்று வேறிடத்தில்
துன்மைகள் சேர்ந்ததென்றோம் தேவிக்கு அந்தியத்தில்
தன்சுதர் யாவும்மாண்டு சஞ்சல மனத்தளாகி
I will catch hold of you. Because of that, no child will be born.” Saying so that spirit went to another place. That curse fell upon her. In her last days, all her children died and she was a worried woman.
21பித்தமாம் குணத்தளாகி பேதையு மரணமாகி
வித்தகன் வரியப்பட்டு விளங்கினா ளிக்குலத்தில்
சத்திக்கு இரண்டுசாபம் சார்ந்ததால் சந்ததியும்தோஷம்
நித்திரை காலம்தன்னில் நேரிடும் முனியும்தானும்
Because of this she became mentally ill and died. Because Brahma created her again, she took rebirth on this earth. Because of the two blemishes, she had no issues. During sleep, that spirit will come upon her.

Remedy for the curse

22சுதர்தோன்ற கிரிகையொன்று செப்புவீர் முனியேநீதான்
வதிபதி செய்வினைக்கு வரைகிறோம் கிரிகைஒன்று
பதியினில் கருமசாந்தி பண்ணியும் சத்திபீசம்
சதியிலா பஞ்சகோணந் தனிலதை அமைத்துமேதான்
Kindly tell a remedy for putradosha. Saptarishis replied, “We will tell a remedy for the past karma. Prepare a Chakra with five angles (Pancha Kona Chakra) in the house and invocate Goddess Sakthi in that chakra. 
23சத்தியின் பூசைசெய்து சகஸ்திர மந்திரம்செபித்து
வித்தகி அணிந்துகொண்டு வெள்ளியின் வாரநோன்பு
பத்தியாய் ஆறுதிங்கள் பாவையும் விரதம்கொள்ள
சுத்தின வினைகள்நீங்கி தோன்றிடும் சுதர்கள்தானே
Like that, Puja should be performed for Sakthi, chanting the thousand names of the Goddess, and she should wear the amulet. For six months, every Friday she must observe fast. As a result of this penance, all her bad deeds surrounding her will leave. Children will be born.”
24சொற்படி செய்யாராகில் சுதர்களும் தோன்றாதாகும்
சொற்படி செய்வாராகில் தோன்றிடும் ஆண்பால்ஒன்று
மைப்படி கன்னிஒன்று வரைகிறோம் தீர்க்கமாக
அப்பணி சடையோன்தேவி அருளிய மொழிகுன்றாது
If she does not do as stated above, children will never be born. But if she performs the remedies, one male and one female child will be born. Oh! Wife of Lord Shiva wearing a snake and having a knotted hair! Whatever we said will not go wrong.
25மாரன்செய் வினைகளுக்கு வரைகிறோம் கிரிகைஒன்று
ஆறுமா முகத்தோன்வாழும் (?)தணிகையூருக்கு
தீரமாய் ஏழுகார்த்தி சிலுகிலா சென்றுமேதான்
பாரினில் அந்தநாளில் பரமரடி யாரான
For the bad deeds of the native we will tell a remedy. He must visit Thiruthani Murugan temple on the day of Krittika nakshatra seven times, and he must donate food to
26இருபத்தோர் பந்துக்கன்னம் இன்பமா யளித்துமேதான்
திருமகன் உள்ளூர்சென்று தென்திசை காளிகோஷ்டம்
அரிவைக்கு அபிஷேகித்து அதுமுதல் இரண்டுஆண்டும்
திருவிளக் கொன்றுவைக்க தீவினை விலகுமென்றோம்
(continuation from previous verse) 21 devotees of Lord Muruga with affection. Returning to his home town, he should go the temple of Goddess Lakshmi and perform Abhisheka (unction) to the Goddess and from then onwards continuously for two years he must light a lamp and perform Puja. If he does like that all his bad deeds will vanish.

Fortunes of the native

27இதுவின்றி வேறுசொல்வேன் இல்லத்தில் பிசாசுவாசம்
அதுசாந்தி யதனால்நீங்கும் அறைகிறோம் இவனின்யோகம்
வதிபதி வந்தபின்பு வளர்ப்பிறை போலேயோகம்
அதற்குமுன் குடும்பலைச்சல் அலைமீது துரும்புபோலே
Not only this, I will tell you one more thing. The spirit is living in the house; that will also leave if he performs this remedy. We will tell about his fortunes. Rajayoga will grow like that of an increasing Moon after the arrival of his wife. Before that, there will be unnecessary wandering on account of family like a straw on the waves.
28பாலனும் வாழ்வானாகும் பாவையால் புகழுமெய்தும்
சாலவே துயிரியங்கள் செட்டுகள் செய்தலுண்டு
ஏலவே சுதரால்யோகம் யெய்திடும் முப்பாண்டின்மேல்
ஞாலமேல் புகழுமெய்தும் நல்காது தரித்திரம்தான்
He will become famous because of his wife. He will do business as well as perform moral and religious duties. He will attain fortunes because of his children. After his 30th year, he will attain name and fame in this world. Poverty will not afflict him.

It is stated that the native will not have any issues. He may get issues only if he and his wife perform the necessary remedies as stated by the rishi. Hence the statement that he will attain fortunes due to his children is not acceptable.

29அன்னமும் குறைவுறாதான் அவன்பந்து மதிக்கவாழ்வன்
பொன்கட னில்லாவாழ்வன் பெருமையாய் வணிபம் செய்வன்
இன்னமும் விபரமாக இயம்புவோம் பின்பாகத்தில்
உன்னத வானைபெற்ற உத்தமி கேட்டிடாயே
There will be no problem for food. His relatives will appreciate him. Will have no debts. Will do business in a noble manner. We will tell more details in the second chapter. The rishi addresses Goddess as the one who got the lofted children and asked her to listen further.

About the native’s mother

30மாதுரு குணத்தைச்சொல்வேன் மாநிறம் பித்ததேகி
ஓதுவாள் சுகமாய்வார்த்தை உள்மனம் கபடுமில்லாள்
காதலி துணைவர்காணாள் கழறுவீர் அந்தசங்கை
தீதாக நாலில்சேயும் சேர்ந்ததால் சொன்னோம்யாங்கள்
We will tell about the characteristics of the mother. She will have a wheatish complexion and a Pitta constitution. Will use comfortable and sweet words. Will not have a deceitful mind. She will have no brothers. What is the reason for that? The placement of Mars in the 4th house is the reason for that.

Here it is stated that owing to the presence of Mars in the 4th house, the native’s mother will have no siblings. Mother’s siblings are to be deduced from the 6th house (3rd from the 4th house) and the 2nd house (11th from the 4th house). These two houses viz., 6th house and the 2nd house do not show any indication for the absence of siblings for the mother. But look at Moon, karaka for mother. The 3rd from Moon is Aries and its lord Mars is debilitated in the 6th house from Moon and this is the reason for the absence of siblings for the native’s mother.

Previous birth of the mother

31அன்னையின் பூர்வம்சொல்வேன் அச்சிறு வர்க்கம்தன்னில்
வன்னிய குலமுதித்து வாழுநாளில் வினையைச்சொல்வேன்
கன்னிகை வரனோடுகூத்து கலந்தனள் பட்சிக்கேதான்
அன்னவ ரடிபணிந்து அணுகினாள் கடைவீதிக்கு
We will tell the details of the previous birth of the mother. While living in a small Vanniar community, we will tell about the blemish that came upon her. After performing a dance program in Thirukazhukundram temple and praying to God, he went for shopping.
32குங்கும மஞ்சள்சீப்பு கோதையும் வாங்கிக்கொண்டு
தங்கமுமீ யாதாகி ---மான் போலமறைந்தாள்
அங்கவன் வணிபன்பார்த்து அம்மாதைக் காணாதாகி
சங்கையாய் மனத்தனாகி சாற்றுவான் சாபம்தானும்
She purchased Kumkum (a red powder formed of turmeric with alum and lime juice), turmeric, and comb. But she did not pay for those things and slipped away very fast. On noticing her absence, the shopkeeper became angry and cursed her:
33ஏனமது ஆகாமுன்னம் ஏகுவான் வரனுமேதான்
வனிதைபின் சென்மம்தன்னில் மத்தியில் விதவையாகி
கனமிலா குடும்பியாகி காசினி தன்னில்வாழ்வாய்
சினமுடன் சொல்லிதூளை தூற்றினான் என்றுசொல்லுவோம்
“Even before you finish using the Kumkum, your husband will die. In your next birth, you will become a widow and live in an ignoble family.”
34மாதுக்கு அந்தஆண்டில் மாரனும் மரித்துமேதான்
காதலி வருத்தமுற்றுக் காலன்தன் பதிக்குச்சென்று
வேதனால் வரியப்பட்டு விளங்கினாள் என்றுசொல்வோம்
சூதாக வணியன்சாபம் சேர்ந்ததால் தோகைக்கேதான்
In the same year, her husband died. She also reached the abode of Yama with grief. She was created again by Brahms and took this birth. The curse of the previous birth came upon her.
35ஆதியில் வரனுமாள்வன் அவளுமே சிறையாய்வாழ்வள்
நீதியாய் ஈரெட்டாண்டில் நிமலியு மரிப்பாளாகும்
காதலி பின்சென்மம்கேள் கடையூரில் யிக்குலத்தில்
நீதியா யுதிப்பாளாகும் நிமலியே கேட்டிடாயே
In the beginning her husband will die. She will also go to jail. She will also die righteously when the native is 16 years of age. In her next birth, she will be born in Thirukkadayur in the same caste. Listen, Parvati!

Previous birth of the father

36தந்தையின் பூர்வம்சொல்வேன் தென்திசை தவளைதன்னில்
இந்ததோர் குலமுதித்து இருவினை யில்லாதாகி
முந்தின பொருளும்பெற்று உலகுக்கு நல்லோனாகி
அந்தவன் வினையில்லாமல் அணுகினான் காலநாடு
We will tell about the previous birth of the father. Born in the southern side in a blemish-less community, living without any good or bad deeds, inheriting his father’s properties and becoming a good person to the people of the world and died without any difficulties.
37சிரநான்கோன் வரியப்பட்டு செனித்தவ னென்றுசொல்வோம்
இருநான்கு திங்கட்குள்ளே ஏகுவான் காலநாடு
மறுசென்மம் தணிகைதன்னில் வருகுவான் ரெட்டிவம்சம்
கரிமத வானைப்பெற்ற காதலி கேட்டிடாயே.
He was born again, created by Brahma. He will die within 8 months after the birth of the native. The next birth will be in the Reddy community in Tiruthani. Oh! Begetter of elephant headed Lord Ganesha! Listen.

Last days of the native

38பாலகன் தனக்குகண்டம் பகருவோம் அறுபதாண்டில்
சாலவே கெண்டம்நேரும் சண்டனைக் காணானாகும்
ஏலவே அறுபானெட்டில் இடபமா தத்திலேதான்
கோலமாய் யுடலம்ஏகும் கூறுவோ மிவன்பின்சென்மம்
The native will face a danger to his life in his 60th year. But he will not meet Yama (meaning, will not die). But in his 68th year, in the month of Taurus (May-June), he will die. We will tell about his next birth.

Next birth of the native

39உத்திரம் வேலங்காட்டில் உதிப்பனாம் வேளானாக
பத்தினி யிவன்பின்னாலே பகருவோம் மாரகங்கள்
வித்தகி பின்சென்மம்கேள் விரிஞ்சியில் சைவசேயாய்
உத்தமி யுதிப்பாளாகும் உரைத்தது தப்பாதாகும்
In the north, in a place called Velankadu (Tiruvaalangaadu) he will take birth as an agriculturist. His wife will die after him in the present birth. We will tell about her next birth. In Virinchi country, this lady will take birth as a shaiva girl. Whatever we say will not go wrong.
40செனித்திடு காலந்தன்னில் சதயநாள் மூன்றாம்பாதம்
சினமுளராகு தன்னில்சஷ்டி ஆண்டதின் மேல்திங்கள்
கனமுடன் ஏழதாகும் கழறினோம் பூர்வபாகம்
அணையவே தவங்கள்செய்யும் அம்பிகை யாளேகேளாய்
At birth, the Janma Nakshatra was Satabhisha, third pada. The dasa remaining at birth is 6 years and 7 months of Rahu dasa. We told you the first chapter. Listen Ambike!

Translated by Yenbeeyes; edited by Madhivanan